பாவனைக்கு உதவாத மீன்கள் அடங்கிய 98 கொள்கலன்கள் தரையிறக்கம்
சீஷெல்ஸில் இருந்து தாய்லாந்து நோக்கி பயணித்த கப்பலில் இருந்து பாவனைக்கு பொருத்தமற்ற மீன்கள் அடங்கிய 98 கொள்கலன்கள் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரிம உரங்களை தயாரிப்பதாகவே இந்த கொள்கலன்கள் தரையிறக்கப்படுவதாக முன்னதாக அனுமதி கோரப்பட்டிருந்ததாக கோபா எனப்படும் அரசாங்க கணக்கு குழு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் குறித்த மீன்கள் அடங்கிய 98 கொள்கலன்களும் நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், மீன் கழிவுகளுக்காகவே இந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் டி.டி உபுல்மலி பிரேமதிலக்க மஹத்மோயா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக எதிர்வரும் (05.03.2024) ஆம் திகதி அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என அரச கணக்குகள் தொடர்பான குழுவின் தலைவர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.