தீவிரவாதி சஹரானின் சகா வாங்கிய மர்மக் காணி! வெளிவரும் திடுக்கிடும் தகவல்
இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி உலகையே உலுக்கிப்போட்ட ஈஸ்டர் குண்டுதாக்குதல்கள் மட்டக்களப்பிலேயே திட்டமிடப்பட்டது. மேலும் இதில் மட்டக்களப்பைச் சேர்ந்த பல முஸ்லிம்களே அதில் சம்பந்தப்பட்டிருந்தனர்.
குறித்த தாக்குதல் இடம்பெறுவதற்கு நான்கு நாட்கள் முன்னர் மட்டக்களப்பில் வாங்கப்பட்ட ஒரு காணி தற்போது மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளது.
இலங்கையில் மீண்டும் ஒரு தாக்குதல் இடம்பெறலாம் என அரசதரப்பில் இருந்து எச்சரிக்கை தகவல்கள் அடிக்கடி முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பில் வாங்கப்பட்ட காணி பற்றிய தகவல்களை வெளிக்கொணருவது தற்போது முக்கியம் என்றே நினைக்கின்றோம்.
மட்டக்களப்பு, பொலனறுவை, மற்றும் அம்பாறை மாவட்டங்களில் கடந்த இரண்டு தசாப்த காலமாக, பல ஆயிரம் ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகள் அரபு நாடுகளின் நிதியுதவியுடன் சட்டவிரோத ஆவணங்களை தயாரித்து கிழக்கிஸ்தான்’ என்ற தனி இஸ்லாமிய இராட்சியத்திற்காக என்று கூறி கொள்வனவு செய்து வந்தன.
ஏறாவூர், ரிவதென்னை, காத்தான்குடி போன்ற இடங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் ஜீகாதிகளின் பயிற்சிகளுக்கென்று வாங்கிக் குவிக்கப்பட்டிருந்தன. இதனை தடுத்து நிறுத்த முயற்சித்த மட்டக்களப்பு மாவட்ட காணி ஆணையாளர் அவரது வீட்டில் வைத்து இனந் தெரியாத நபர்களினால் தூப்பாக்கியால் சுப்பட்டார்.
இலங்கையில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் நடைபெறுவதற்கு நான்கு நாட்களுக்கு முன் மட்டக்களப்பில் உள்ள ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள புன்னக்குடா கடற்கரையை அண்டிய பகுதியில் 19.04.2019 இல் 39 ஏக்கர் காணி ஒன்று கொள்வனவு செய்யப்பட்டது.
குறித்த 39 ஏக்கர் காணியை சஹரானின் சகா என்று கூறப்படுகின்ற காத்தான்குடியைச் சேர்ந்த முகமது பதுருதீன் முகைதீன் என்பவர் பெயரில்தான் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
சஹரானின் சகாவான முகமது பதுருதீன் முகைதீன் என்பவர் 1990ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தில் இணைந்து அதனது புலனாய்வுப் பிரிவில் பணியாற்றியவர் இவர். இராணுவத்தை விட்டு விலகி பின்னர் இலத்திரனியல் உபகரனங்கள் திருத்தும் வேலைகளைச் செய்தபடி 'சஹரான்' குழுவில் இணைந்து செயற்பட்டு வந்துள்ளார்.
மேலும் சஹரானின் சகாக்களுக்கு உடற்பயிற்சிகளையும், ஆயுதப் பயிற்சிகளை முகமது பதுருதீன் முகைதீனாலேயே வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
தற்கொலை குண்டுதாக்குதலில் சஹ்ரானுடன் செயல்பட்டது உறுதியானதை அடுத்து முகமது பதுருதீன் முகைதீன் சிறிலங்கா குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் தடுத்துவைக்கப்பட்டார்.
முகமது பதுருதீன் முகைதீனிடம் குண்டுத்தாக்குதலுக்கு 4 நாட்களுக்கு முன்பாக அவரால் கொள்வனவு செய்யப்பட்ட காணி பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டனவா என்பது தெரியவில்லை.
மேலும் 39 ஏக்கர் காணியை வாங்கியதற்கான பணம் சஹரானுக்கு எப்படிக் கிடைத்தது என்றோ, காடு மற்றும் கடல் சார்ந்த அந்த இடத்தை என்ன நோக்கத்திற்காக வாங்கப்பட்டது என்றோ விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டனவா என்றும் இதுவரையில் தெரியவில்லை. அந்த இடத்தை அரசாங்கம் கையகப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிட்டத்தக்கது.
இதேவேளை புன்னைக்குடா பிரதேசத்தில் உள்ள இந்தக் காணிக்கு செல்வதற்கான பாதைகள் தனியாரால் அமைக்கப்பட்டுவருவதாக அங்கு வாழும் தமிழ் மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
மேலும் அந்தப் பாதை அமைப்பில் சில முஸ்லிம் இளைஞர்கள் ஈடுபட்டு வருவதாகவும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளார்கள். ஏறாவூர் பற்று பிரதேச சபையோ அல்லது காவல்துறையோ இதுவரை இதுகுறித்துஎந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.





