வீட்டில் இந்த பொருளை இப்படி வைப்பதனால் லக்ஷ்மி கடாட்சம் பெருகுமாம்
ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் லக்ஷ்மி கடாட்சத்துடன் சுபீட்சமாகவும் நோய் நொடி இல்லாமல், வறுமை இல்லாமல் மகிழ்ச்சியுடன் நிம்மதியாக இருக்க வேண்டுமாயின் வீட்டின் அமைப்பானது சரியாக அமைந்திருக்க வேண்டும்.
ஒரு வீட்டில் பூஜை அறை முதன்மையானது அடுத்ததாக பார்க்க வேண்டியது சமையலறை என்று கூறப்படுகிறது.
வீட்டின் சமையலறை அமைய வேண்டிய இடம்
வீட்டின் அக்னி மூலையில் இந்த சமையல் அறை அமைக்கப்படுகின்றது. அடுப்பு வைத்திருக்கும் இடமும் அக்னி மூலையாக தான் இருக்கும்.
எந்த பொருளை எப்பொழுது வாங்க வேண்டும்
அத்தோடு அக்னி மூலையில் அடுப்பு அமைந்திருக்கும். வலது கை புறத்தில் எண்ணெய், உப்பு போன்றவற்றை நிரம்ப வைத்திருக்க வேண்டும். அங்கு வைத்திருக்கப்படும் எண்ணெய் அல்லது உப்பு குறையவே கூடாது.
பொதுவாக பண்டைய காலங்களில் எல்லாம் தானியங்களை, அரிசி, பருப்பு, புளி போன்ற மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கி வைப்பது வழக்கமாக வைத்திருந்தார்கள்.
அனுதினமும் சமைக்கக்கூடிய முக்கியமான பொருட்களாக இருக்கக்கூடிய உப்பு, புளி, மிளகாய், பருப்பு, அரிசி, எண்ணெய், மஞ்சள், அஞ்சறை பெட்டியில் வைத்திருக்கக் கூடிய தாளிக்க கூடிய மசாலா பொருட்கள் அனைத்துமே எப்பொழுதும் நிறையவே வாங்கி வைத்திருப்பார்கள்.
எப்பொழுதும் இரண்டு டப்பாக்களை வைத்திருக்க வேண்டும். ஒன்று பெரிய அளவிலானதும் இன்னொன்று சிறிய டப்பாக்களும் இருக்க வேண்டும்.
பெரிய அளவிலான டப்பாக்களில் கிலோவாக வாங்கி வைத்து அதிலிருந்து எடுத்து சிறிய டப்பாக்களில் முழுமையாக நிரப்பி கொள்ள வேண்டும். இந்த சிறிய டப்பாக்கள் எப்பொழுதும் குறைவில்லாமல் பார்த்துக் கொள்வது என்பது தான் முக்கியமாகும்.
இந்த டப்பாக்களில் இருக்கக்கூடிய பொருட்கள் முடிவடையும் பொழுது பெரிய டப்பாவில் இருந்து எடுத்து நிரப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.
இது தான் குடும்பத்தில் வறுமை இல்லாத செழிப்பான வாழ்விற்கு சிறப்பான சமையலறையாக இருக்கக்கூடும்.
அதுபோல தண்ணீர் பானையிலும் தண்ணீர் குறைய குறைய நிரப்பி கொண்டே இருக்க வேண்டும்.
வீட்டில் சமையல் கட்டில் குலதெய்வமும், பித்ருக்களும் நீரில் இருப்பதாக சொல்லப்படுகிறது. பெரும்பாலான மக்கள் வீட்டில் ஒரு மண் குடுவையில் அல்லது சிறிய மண் பானையில் தண்ணீரை வாயு மூலையில் வைத்திருப்பார்கள்.
அத்தோடு வாயு மூலையில் தண்ணீர் பானையில் நீர் முடிவடைந்த நிலையில் வைத்திருக்கக் கூடாது. அத்தோடு அங்கு தண்ணீர் பானையோ அல்லது அரிசி மூட்டையோ ஏதாவது ஒன்றை வைத்திருக்க வேண்டும்.
நாணயங்களை சேர்க்க கூடாத பொருள்
இரும்பினால் ஆன அஞ்சறை பெட்டியில் நாணயங்களை சேகரிக்க கூடாது. இரும்பு பொருட்களை இரும்புடன் சேர்க்கக்கூடாது. ரூபாய் நோட்டுகளை சேர்க்கலாம்.
அது போல அஞ்சறை பெட்டி அலுமினியம் மற்றும் எவர்சில்வரில் இருப்பது நன்மை தரும். அந்த காலங்களில் எல்லாம் வெண்கலத்தில் வைத்திருந்தார்கள்.
பணத்தை சேகரிக்கும் பொழுது சமையல் கட்டில் மண்சட்டி ஒன்றை மறைத்து வைத்து அதில் சேகரித்து வந்தால் செல்வ வளம் அதிகரிக்குமாம்.
அத்தோடு சமையல் அறையில் இருக்கக்கூடிய அஞ்சறைப் பெட்டியில் மஞ்சள், ஏலக்காய் போன்றவற்றை வைத்திருப்பது லட்சுமி கடாட்சத்தை அதிகரிக்குமாம் இதனால் பணமும் பெருகும்.