லஹிரு குமார மற்றும் லிட்டன் தாஸுக்கு அபராதம்!
இலங்கை அணியின் பந்துவீச்சாளர் லஹிரு குமார மற்றும், பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர் லிட்டன் தாஸ் ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது.
இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 15ஆவது போட்டி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நேற்று சார்ஜாவில் இடம்பெற்றது. இதன்போது, பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர் லிட்டன் தாஸ் மற்றும் இலங்கை அணியின் பந்துவீச்சாளர் லஹிரு குமார ஆகியோருக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிமுறைகளை மீறியதாகக் கூறி இலங்கை அணியின் பந்துவீச்சாளர் லஹிரு குமாரவிற்கு ஒரு குறைபாட்டு புள்ளியுடன் போட்டி கட்டணத்தில் 25 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் , பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சாளர் லிட்டன் தாஸிற்கு ஒரு குறைபாட்டு புள்ளியுடன் போட்டிக் கட்டணத்தில் 15 சதவீத அபராதமும் விதிக்கப்படுவதாகவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.