குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம் ; அசுர வளர்ச்சியை காணப்போகும் ராசிக்காரங்க இவங்க தான்
ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் செல்வம், அறிவு, மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். நவகிரகங்களில் குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார்.

இந்த விபரீத ராஜயோகமானது ஒருவரது வாழ்க்கையில் குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சியையும், நிதி நிலையில் முன்னேற்றத்தையும் கொண்டு வரக்கூடிய அளவில் சக்தி வாய்ந்தது. இப்போது குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தால் நல்ல வளர்ச்சியைக் காணும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

சிம்மம்
சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டில் குரு பகவான் உள்ளார். இதனால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தால் வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழிலை அல்லது வேலையை செய்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வெளிநாடு செல்லும் கனவு இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். நீண்ட காலமாக இழுத்துக் கொண்டிருந்த அரசு வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும்.

தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டில் குரு பகவான் உள்ளார். இதனால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தால், நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் குரு பகவானின் அருளால் கைக்கு வந்து சேரும். ஏற்கனவே முதலீடுகளை செய்து, அதிலிருந்து எந்த நலனையும் பெறாமல் இருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் 6 ஆவது வீட்டில் குரு பகவான் உள்ளார். இதனால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தால் நிதி நிலைமை வலுவடையும், கடன் தொல்லைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
