தமிழர் பகுதியில் பயங்கர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!
குச்சவெளி - சலப்பையாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் குறித்த விபத்தில் மற்றுமொரு நபர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (21-10-2023) மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வீதியோரத்தில் உட்கார்ந்திருந்திருந்த போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் மோட்டார் சைக்கிளில் பயணித்த 17 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிய வருகின்றது.
விபத்தில் உயிரிழந்த இளைஞன் குச்சவெளி - நாவல்சோலை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகிறது.
விபத்தில் காயமடைந்த மற்றைய நபரை குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.