கொலன்னாவை பகுதியில் அபாய நிலை... ஹெலிகொப்டர்களில் அனுப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள்!
களனி ஆற்றின் நீர் மட்டம் அதிகரிப்பதால் கொலன்னாவை பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருவதாக கொலன்னாவ பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்றையதினம் (01-06-2024) முதல் சீரற்ற வானிலை நிலவி வருகின்றது.
பல பகுதியில் கடும் மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பாரிய மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
இலங்கையின் பிரதான ஆறுகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொலன்னாவை பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, நெலுவ வைத்தியசாலைக்கு செல்லும் வீதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் வைத்தியசாலையில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவசர நோயாளிகள் அனைவரும் ஹெலிகொப்டர்கள் மூலம் உடுகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உடுகம வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டிகள் செல்ல முடியாத நிலையில், ஹெலிகொப்டர்கள் மூலம் தாய்மார்கள் மற்றும் நோயாளிகள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.