வெறுங்கையால் தொடப்படும் தொல்லியல் அகழ்வாய்வுகளில் மீட்கப்படும் தொல்பொருட்கள்!
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில் அகழ்வாய்வுப்பணிகள் செப்டெம்பர் 06 ஆம் திகதியில் இருந்து இடம்பெற்று வருகின்றன
குறித்த அகழ்வாய்வு பணிகள் மூன்றாவது நாளாக இன்றையதினமும் இடம்பெற்றன.
இவ்வாறான நிலையில், கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுப்பணிகளில் மீட்கப்பட்டும் தொல்பொருட்களை வெறுங்கையினால் அதிகாரிகள் தொடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான தொடுகையில் தொல்பொருட்களில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் இங்கு பெரும் நீதியைக்கோரி நடத்தப்படும் அகழ்வாய்வுபணிகள் வெறுங்கையில் நடக்கிறது.
இதனால்தான் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்விற்கு சர்வதேச துறைசார் நிபுணர்களின் பங்களிப்பைக் கோரினோம். என முகநூலில் வவுனியாவை சேர்ந்த நபர் Jera Thampi என்பவர் குறித்த தகவலை பதிவிட்டுள்ளார்.