கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம்: ஊடகவியலாளர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்!

Sri Lanka Police Mullaitivu
By Shankar Sep 08, 2023 04:01 PM GMT
Report

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில் 3 வது நாள் அகழ்வாய்வுகள் இன்றைய தினம் இடம்பெற்றது.

இதேவேளை, அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களான விஜயரத்தினம் சரவணன் மற்றும், பாலநாதன் சதீஸ் அகியோரின் கடமைக்கு பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியதுடன், குறித்த ஊடகவியலாளர்களை பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம்: ஊடகவியலாளர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்! | Kokkuthuduvai Human Remains Threats To Journalists

குறித்த 3வது நாள் அகழ்வாய்வு பணிகளை பார்வையிடுவதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் வருகை தந்திருந்தனர்.

இந்த நிலையில் மனிதப் புதைகுழி அமைந்த பாதுகாப்புக்கூரை அமைக்கப்பட்ட உட்பகுதியிலிருந்து பார்வையிடுவதற்கு வருகைதந்த மருத்துவபீட மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம்: ஊடகவியலாளர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்! | Kokkuthuduvai Human Remains Threats To Journalists

அப்போது அங்கு குறித்த மனிதப்புதைகுழியின் பாதுகாப்பு கூரையின் வெளியே இருந்து ஊடகவியலாளர்களான விஜயரத்தினம் சரவணன் மற்றும், பாலநாதன் சதீஸ் ஆகியோர் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அங்கிருந்து ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபட முடியாதென ஊடகவியலாளர்களின் கடமைக்கு பொலிசார் இடையூறு ஏற்படுத்தியதுடன், தள்ளி அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.

அத்தோடு நீண்ட தூரத்தில் இருந்தே செய்தி சேகரிக்க வேண்டுமெனவும் ஊடகவியலாளர்களை பொலிஸார் எச்சரித்துமிருந்தனர்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம்: ஊடகவியலாளர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்! | Kokkuthuduvai Human Remains Threats To Journalists

இந்த மனிதப்புதைகுழி அகழ்வு தொடர்பில் ஏற்கனவே இடம்பெற்ற கலந்துரையாடல்களில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு அனுமதியளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரின் இத்தகைய அடக்குமுறைச் செயற்பாடு ஊடகவியலாளர்களுக்கு பெருத்த அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, கடந்த செப்டெம்பர் (07-09-2023) வியாழன் அன்று 2 அவது நாள் அகழ்வாய்வின்போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம்: ஊடகவியலாளர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்! | Kokkuthuduvai Human Remains Threats To Journalists

குறித்த இரண்டாம் நாள் அகழ்வாய்வில் தடையப் பொருட்களாக துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் பெண்களின் ஆடைகள் என்பன கண்டு பிடிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறான சூழலில் இன்று 3 வது நாள் அகழ்வாய்வில் ஊடகவியலாளர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல் வழங்கி, அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரித்தமை, குறித்த அகழ்வுப்பணி தொடர்பில் பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஊடகவியலாளர்களின் கடும் பிரயத்தனத்தின் பின்னர், இவ் விடயம் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட பிற்பாடு ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US