கருப்பின மனிதரிடம் கை கொடுக்க மறுத்த மன்னர் சார்லஸ்!(Video)
இங்கிலாந்தின் மன்னர் சார்லஸ் மக்களை சந்தித்தபோது கறுப்பினத்தவர் ஒருவரிடம் கைகொடுக்காது சென்ற காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை அடுத்து அவரது புதல்வர் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னரானார்.
Black man, you are on your own . pic.twitter.com/4Ely5WOGnj
— Obakeng Ramabodu (@RamaboduObakeng) September 19, 2022
மன்னர் உதாசீனம்
இந்நிலையில் ராணியின் மறைவின் பின்னர் அரண்மைக்கு வெளியே மக்களுடனான சந்திப்பில் அரசர் இவ்வாறு நடந்துகொண்டுள்ளார்.
அங்கிருந்த வெள்ளை நிறத்தவர்களுக்கு கைகொடுத்து வந்த மன்னர் சார்லஸ் கறுப்பின மனிதர் மன்னருக்கு கைகொடுத்தபோது அவர் அந்த மனிதருக்கு கைகொடுக்கவில்லை.
இந்நிலையில் அக்காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.