காதலியின் வாயில் வெடி வைத்து கொன்ற கொடூரம் ; தகாத உறவால் வெறிச்செயல்
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்திலுள்ள ஹிரசனஹில் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கேரளாவைச் சேர்ந்த இளைஞருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
இதனிடையே, குறித்தப் பெண் அவரது உறவுக்கார இளைஞரான அதே கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் தகாத உறவைப் பேணியதாக தெரிவிக்கப்படுகிறது.
வாக்குவாதம்
இந்நிலையில், குறித்த இளைஞரை அந்த பெண் நேற்று விருந்தகமொன்றில் சந்தித்த நிலையில் இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தான் மறைத்து கொண்டுவந்த வெடிமருந்தை பெண்ணின் வாயில் அடைத்து அதை வெடிக்கச்செய்துள்ளார்.
இதில், அந்த பெண்ணின் முகம் முழுவதும் வெடித்து சிதறி அவர் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து காதலரான இளைஞன் அங்கிருந்து தப்பியோட முயற்சித்த நிலையில், அறையில் வெடிசத்தம் கேட்டு வந்த ஊழியர்கள் விரைந்து சென்று தப்பியோட முயற்சித்த நபரை பிடித்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் குறித்த இளைஞனை கைது செய்தனர். மேலும் அறையில் இரத்த வெள்ளத்தில் உடலமாக கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.