யாழ்.மாவட்டத்தில் நீண்ட நாட்களின் பின் கொரோனாவுக்கு ஒருவர் பலி!
யாழ்.மாவட்டத்தில் நீண்ட நாட்களின் பின்னர் தென்மராட்சி பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. நுணாவில் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பத்தை சேர்ந்த முதியவரே கடந்த புதன் இரவு உயிரிழந்துள்ளார்.
பொதுச் சுகாதார பரிசோதகர் நேற்று முன்தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமையால் உயிரிழந்தவரின் உறவினர்கள் சடலத்தை நேற்று தகனம் செய்ய எற்பாடு செய்தனர். இந்நிலையில் அங்கு சென்ற சுகாதார பகுதியினர் சடலத்தில் பரிசோதனை மேற்கொண்டபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து சடலம் சாவகச்சோி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சுகாதார பாதுகாப்பு முறைகளின் கீழ் தகனம் செய்யப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.