சிறுநீரக மோசடி; விசாரணை வளையத்தில் பிரபல மருத்துவமனை மருத்துவர்கள்!
சிறுநீரக மோசடி தொடர்பில் இரண்டு வைத்தியர்கள் தொடர்பிலான முறைப்பாடு தொடர்பில் இலங்கை மருத்துவ சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கை மருத்துவ சபையின் ஒழுக்காற்று விதிமுறைகளுக்கு அமைவாக குறித்த இரு வைத்தியர்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பிக்க குழுவினால் ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சபையின் செயலாளர் மருத்துவர் ஆனந்த ஹபுகொட தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஹெவ்லொக் வீதியில் வசிக்கும் மருத்துவர் ருவன் எம். ஜயதுங்க இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார். இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்ட இரண்டு வைத்தியர்கள் சிறுநீரக மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் கண் வைத்தியசாலையில் இந்த வைத்தியர்கள் பணியாற்றுவதாகத் தெரியவந்துள்ளது. அத்துடன் மருத்துவர்களின் மோசடி தொடர்பில் சிறுநீரக மோசடி தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு சிறுநீரக மோசடி தொடர்பாக இந்தியப் பிரஜை ஒருவர் சிஐடியால் கைது செய்யப்பட்டார். அச்சந்தேக நபர், குறித்த இரண்டு வைத்தியர்கள் தொடர்பிலும் சமர்ப்பணம் செய்துள்ளதாக இலங்கை மருத்துவ சபையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.