அவுஸ்திரேலியாவில் உருவாகியுள்ள புதிய பிரச்சனை: அதிருப்தியில் மக்கள்
அவுஸ்திரேலியாவில் உருவாக்கியுள்ள புதிய சர்ச்சையினால் துரித உணவு உலகத்தில் ஆட்டம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, KFC உணவகங்களின் உணவுப் பொருட்களின் சுவை குறைந்துவிட்டதாக அவுஸ்திரேலிய மக்கள் பரவலாக அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், உணவுப் பொருட்களில் lettuce வகைக் கீரைக்குப் பதிலாக முட்டைக்கோஸ் கலவை ஒன்றை KFC பயன்படுத்த ஆரம்பித்ததையடுத்தே இந்த அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் பாரம்பரிய lettuce கீரை விலை உயர்வால், KFC உணவகங்கள் தங்களுடைய உணவுக் கலவை மாற்றியுள்ளன.
இதனால் ‘KFC இல் உணவு சாப்பிடலாமா வேண்டாமா’ என்று மறுபரிசீலனை செய்வதாகவும் சிலர் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.
சிட்னி அல்லது மெல்பர்னில் முன்பு சுமார் 2 அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்ட ஒரு கட்டு lettuce கீரை இப்போது 8 டொலருக்கு விற்கப்படுகிறது.
தற்போது lettuce கீரைக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் மறு அறிவிப்பு வரை lettuce கீரை உள்ள அனைத்துப் பொருட்களிலும் முட்டைக்கோஸ் கலவையைப் பயன்படுத்துவதாக KFC நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளது.
இதனால் குறி்பிட்ட உணவுகளில் - குறிப்பாக பர்க்கர்களில் - சுவை மாற்றம் ஏற்படலாமென அந்த நிறுவனம் அறிவித்தது.
அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, தற்போது விவசாய விநியோகச் சங்கிலியை சீர்குலைத்து பற்றாக்குறைக்கு காரணமாகியதாக KFC நிறுவனம் குறிப்பிட்டது.
குறிப்பாக 5 மாநிலங்களில் KFC உணவகங்கள் பாதிக்கப்படும். விரைவில் விஷயங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வரலாமென நம்புகிறோம் என அது கூறியது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததால் டீசல், உரம் ஆகியவற்றின் விலைகள் ஏற்றம் அடைந்தன. அதுவும் lettuce கீரை விலை உயர்விற்கு ஒரு காரணம் என விநியோகக் கட்டமைப்பு நிபுணர் ஒருவர் கூறியிருக்கிறார்.