விரைவில் சிக்கவுள்ள NPPயின் முக்கிய அமைச்சர் ; எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மீது நிதி முறைகேடு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுப்பதற்கான குற்றப்பத்திரிகைகளைக் கையூட்டல் ஒழிப்பு லஞ்சம் ஆணையகம் தயாரித்து வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியபோது ஒரு கேள்விப்பத்திரத்தில் நிதி முறைகேடு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க ஆணையகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எட்டு மில்லியன் ரூபாய் முறைகேடு செய்ததாக அமைச்சர் மற்றும் இரண்டு பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட உள்ளது.
குறித்த காலகட்டத்தில் குறிப்பிட்ட கேள்விப்பத்திரத்தை வழங்கிய கேள்விப்பத்திர சபையின் தலைவராக குமார ஜெயக்கொடி பணியாற்றினார்.