மொட்டு கட்சியிலிருந்து சஜித் கட்சிக்கு தாவும் 5 முக்கிய உறுப்பினர்கள்?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) பங்களிப்பு வழங்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இருந்து 5 முக்கிய உறுப்பினர்கள் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
தற்போது இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விடயத்தில் இறுதியை அடைவதற்கு சிறிது காலம் எடுக்கும் என்று அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு இடையூறு விளைவிக்கும் என்ற அடிப்படையில் பெயர் குறிப்பிட விரும்பாத அவர், சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணிலின் பொருளாதார மீட்சிக் கொள்கை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் வேறுப்பட்ட கோரிக்கைகளை முன்வைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.