அதிகரிக்கும் போர் பதற்ற நிலை ; இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்
நாட்டில் வசிக்கும் அமெரிக்கப் பிரஜைகளுக்கு, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, இலங்கையில் தங்கியுள்ள அமெரிக்க பிரஜைகள் அவசர தேவைகளுக்கு 011 202 8500 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர அறிவித்தல்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்ற நிலையை தொடர்ந்து, இலங்கையில் வசிக்கும் அமெரிக்கப் பிரஜைகளுக்கு இந்த அவசர அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வானூர்திகள் பற்றிய தகவல்களுக்கு 1912 என்ற துரித இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தேவையான பாதுகாப்பு நிலைமைகள் குறித்த தகவலுக்கு அமெரிக்க தூதரக வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் தகவல்களைப் பெறலாம் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.