கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் 2026-ல் பல நாள் கனவுகள் பலிக்க போகும் ராசிக்காரர்கள்
கேது கிரகம் ஜனவரி 25, 2026 அன்று தனது நட்சத்திரத்தை மாற்றுகிறது. அது பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து முதல் பாதத்திற்கு மாறுகிறது, இந்த பெயர்ச்சிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. கேதுவின் இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான மாற்றத்தைத் தரப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என நாம் இங்கு பார்ப்போம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி அவர்களின் நிதிநிலையில் அபரிமிதமான வளர்ச்சியை ஏற்படுத்தும். கடந்த காலத்தில் மிச்சம் வைத்த வேலைகளை முடிக்க இந்த நட்சத்திர பெயர்ச்சி நல்ல வாய்ப்பைக் கொடுக்கும். பழைய திட்டங்களை மீண்டும் தொடங்கவும், வேலை தொடர்பான சவால்களை எளிதில் சமாளிக்கவும் இது ஒரு சிறந்த காலம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் மற்றும் உங்கள் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். இந்த நேரத்தில் நிதி ஸ்திரத்தன்மை வரும். இது உங்கள் செல்வத்தை எளிதாக நிர்வகிக்கவும் உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் உதவும். ரிஷப ராசிக்காரர்களுக்கு வேலையில் முக்கியமான பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி அவர்களின் அதிர்ஷ்டக்கதவை திறக்கப் போகிறது. இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட சிறப்பான நன்மைகளை அடையலாம், மேலும் கடந்த கால முதலீடுகள் சிறந்த பலன்களைத் தரும். திருமணமானவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.வேலையில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் கிடைக்கும். அவர்களின் வெற்றியாலும், பொருளாதார நிலையாலும் சமூகத்தில் அவர்களின் மரியாதை அதிகரிக்கும். கடந்த காலத்தில் நிலுவையில் உள்ள பணிகளைத் சரியாக முடிக்க முடியும். ஆரோக்கியம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு, இந்த நட்சத்திர பெயர்ச்சி சாதகமான நிதி மற்றும் தொழில்ரீதியான வளர்ச்சியைக் கொண்டுவருகிறது. இது அவர்கள் வாழ்க்கையில் பல நேர்மறையான பலன்களைத் தரப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்களின் பல ஆசைகள் நிறைவேறப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்களின் வருமானம் இரட்டிப்பாக வாய்ப்பு உள்ளது. கடந்த கால முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும். வேலையை மாற்ற விரும்புபவர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சாதகமானதாக இருக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க இது ஒரு சாதகமான நேரம். மாணவர்கள் தங்கள் கல்வியில் பெரிய வெற்றிகளை அடையலாம். உயர்கல்வி பயில்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய இடத்தில் படிக்க வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.
