கேது பெயர்ச்சியால் ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, கேது பெயர்ச்சி வாழ்க்கையை புரட்டிப்போடும் வல்லமை கொண்டது, செல்வந்தர்களை ஏழைகளாகவும், ஏழைகளை கோடீஸ்வரர்களாகவும் மாற்றும் வலிமை கொண்டது.
இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தர உள்ளது. எந்தெந்த ராசிகளுக்கு இந்த கேது பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
மேஷம்
வியாபாரம் மற்றும் தொழிலில் மிகப்பெரிய வெற்றியை இந்த பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு அள்ளித் தர உள்ளது. நிதி வளம், பணியிடத்தில் பாராட்டுகள், மேலதிகாரிகளின் ஆதரவு என 2025 ஆம் ஆண்டு முழுவதும் நன்மைகள் பெருகும். புதிய யோசனைகள் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். அவர்கள் எடுக்கும் ரிஸ்க் அவர்களின் தலைவிதியையே மாற்றும். வருமானத்திற்கான ஆதாயங்கள் அதிகரிக்கும். பொருளாதாரம் மேம்படும்.
மிதுனம்
கேது உங்கள் மூன்றாம் வீட்டில், அதாவது தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் வீட்டில் அமர்கிறார். இது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும், தடைகளைத் தகர்த்தெறியவும் போட்டியாளர்களை முந்தவும் உதவும். பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும், உடல்நலம் மேம்படும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இதனால் அதிக அளவிலான லாபம் கிடைக்கும்.
கடகம்
வெற்றிகரமான ஒரு காலகட்டத்தை இந்த பெயர்ச்சி உங்களுக்குத் தொடங்கி வைக்கிறது. புதிய ஒப்பந்தங்கள், லாபங்கள், உடன்பிறந்தவர்களின் ஆதரவு என உங்கள் நிதி நிலை உயரும். பதவி உயர்வு, தொழில் முன்னேற்றம் போன்றவை ஏற்படும். வியாபாரத்தை விரிவுபடுத்தவும் புதிய முதலீடுகளைச் செய்யவும் இது சரியான நேரம். வாழ்வில் அதிக அளவிலான செல்வம் சேரும்.
கன்னி
பழைய கடன்கள், சட்டச் சிக்கல்கள் நீங்கப்பெற்று நிதி நிலைமை மேம்படும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். இறக்குமதி ஏற்றுமதி வியாபாரம் செய்பவர்களுக்கு இது மிகவும் சாதகமான காலம். பணவரவு அதிகரிக்கும், நீண்டகால நிதி நிலைமை மேம்படும். நிலுவையில் இருந்த தொகை மீண்டும் கிடைக்கும். வேலைவாய்ப்புகள் உருவாகும்.