இளைஞர் உயிரிழப்பு; காணொளி வெளியிட்ட பெண் தலைமறைவு! பொலிஸார் வலைவீச்சு
சமூக வலைத்தளத்தில் பாலியல் சீண்டல் என பெண் வெளியிட்ட காணொளியால் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காணொளி வெளியிட்ட பெண் தலைமறைவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த தீபக் என்கிற நபர் அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அதே பேருந்தில் பயணித்த ஷிம்ஜிதா முஸ்தபா என்கிற பெண் தீபக் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுட்டதாக சொல்லி அதை செல்போனில் வீடியோ எடுத்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

நான் எந்த தவறும் செய்யவில்லை
அவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்ததோடு தீபக்கை கடுமையாக விமர்சித்தனர். இதில் மன உளைச்சல் அடைந்த தீபக் ‘நான் எந்த தவறும் செய்யவில்லை’ என்று தனது உறவினர்களிடம் சொல்லி புலம்பியதாக தெரிகிறது.
அதோடு அவமானம் தாங்க முடியாமல் வீட்டிலேயே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், மக்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
அந்த பெண் வேண்டுமென்றே பேருந்தில் நடந்தவற்றை பாலியல் சீண்டல் போல சித்தரித்து போலியாக வீடியோவை வெளியிட்டு அப்பாவி ஒருவரின் உயிரை பறித்துவிட்டர் என பலரும் இப்போது சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.
அதோடு அந்த பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தற்கொலை செய்து கொண்ட நபரின் குடும்பத்தினரும் கேரளா டிஜிபியிடம் மனு அளித்திருக்கிறார்கள்.
இதையடுத்து வீடியோவை பகிர்ந்த பெண் எங்கே என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்த பெண் தனது சமூகவலைத்தள பக்கத்தை அழித்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படும் நிலையில் அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் கேரள போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.