களனி ரயில் விபத்து ; சந்தேகநபரின் வீட்டில் சிக்கிய உபகரணங்கள்
களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (16) காலை இடம்பெற்ற ரயில் விபத்தைத் தொடர்ந்து, தண்டவாளத்தின் ஆணிகளை கழற்றியதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரின் வீட்டிலிருந்து பல உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அதன்படி, சந்தேகநபர் வசித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, ரயில் தண்டவாளங்களை மாற்றப் பயன்படுத்தப்படும் 3 இரும்பு லீவர்கள் மற்றும் அவற்றை கழற்ற பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் பிற கருவிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் வனவாசல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது.
பேலியகொடை தலைமையக பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மங்கள அஜித் தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.