சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
ஜனவரி முதலாம் திகதி (01-01-2022) முதல் கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயப்படுத்தும் தீர்மானம் இரு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் சட்ட சிக்கல்கள் எவையும் இல்லை. சட்டமா அதிபரின் ஆலோசனையும் அவை தீர்க்கப்பட்டுள்ளன.
எவ்வாறிருப்பினும் தடுப்பூசி அட்டைகளை செல்லும் இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக , கையடக்க தொலைபேசிகளில் கியூ.ஆர். குறியீடு ஒன்றினை அறிமுகப்படுத்துவது தொடர்பில் உரிய அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இதற்கமைய கியூ.ஆர். குறியீட்டினை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் தொழிநுட்ப அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கான நடைமுறைகள் வெகு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) தெரிவித்துள்ளார்.