கீழடி அகழாய்வில் முன்னோர்கள் உபயோகப்படுத்திய அழகிய பொருள் கண்டுபிடிப்பு!
வரலாற்று சிறப்புமிக்க அகழாய்வு தளமான கீழடியில் தற்போது பழங்காலத்தில் முன்னோர்கள் பயன்படுத்திய அழகிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை அங்கு 7 கட்ட அகழாய்வுகள் நடந்து முடிந்துள்ளன.
இதில் பானைகள், முதுமக்கள் தாழிகள், ஆபரண பொருட்கள் உள்பட பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய நூற்றுக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து கடந்த பெப்ரவரி மாதம் கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது. இதற்காக 5 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், 8 ஆம் கட்ட அகழாய்வு பணியின் போது, பழங்காலத்தில் முன்னோர்கள் பயன்படுத்திய அழகிய கிண்ணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
5 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்த கிண்ணம், கருப்பு, சிவப்பு வண்ணம் கலந்து கானப்பட்டது.