அமைச்சின் சொகுசு வாகனத்துடன் விடுமுறைக்கு சென்ற சாரதி ; தீவிரமாகும் விசாரணை
விளையாட்டுத்துறை அமைச்சுக்கு சொந்தமான சொகுசு வேன் ஒன்றை தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தியதாக கூறப்படும் சாரதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த அமைச்சின் போக்குவரத்துப் பிரிவினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
சந்தேகநபரான சாரதி அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு சென்று, சொகுசு வேனை எடுத்துக் கொண்டு, காரியாலய அலுவலுக்காக வெளியில் செல்வதாக பாதுகாப்பு அதிகாரிக்கு தவறான தகவல்களை வழங்கி சென்றுள்ளார்.
இரண்டு நாட்களுக்குப் பின்னர் வேன் திரும்பக் கொண்டு வரப்பட்டதாகவும், அவர் சில நாட்கள் விடுமுறை எடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், நேற்று அவர் பணிக்கு திரும்பியவுடன் பொலிஸார் குறித்த சாரதியை கைது செய்துள்ளனர்.
இந்த வேன் ஏதேனும் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டதா? அல்லது வேறு நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.