பிரான்ஸ் ஜனாதிபதியை மனைவி அறைந்தாரா? காணொளியால் சர்ச்சை
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோனை அவரது மனைவி அறைவது போன்ற காணொளி வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசு முறை பயணமாக வியட்நாம் சென்றிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வளவு பெரிய விஷடமாகும் என நினைக்கவில்லை
அங்கு விமானத்தில் இருந்து இறங்கும் வேளை அவரது மனைவி மக்ரோன் மீது அறைவது போன்றும் அதனை அவர் சமாளித்துக் கொண்டு விமானத்தில் இருந்து கீழே இறங்குவது போன்றும் காணொளி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இமேனுவல் மெக்ரோன்,
தானும் தனது மனைவியும் நகைச்சுவை செய்து விளையாடிக் கொண்டு இருந்ததாகவும் அது இவ்வளவு பெரிய விஷடமாகும் எனத் தான் நினைக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
47 வயதான பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன் 72 வயதான தனது ஆசிரியரை காதலித்து திருமணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
