இரவு கட்டுநாயக்க அதிகவேக நெடுஞ்சாலையில் தீடிரென நடந்தது என்ன?
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள பகுதிகள் மின்கம்பங்களின் மின்குமிழ்கள் இயங்காததால் நேற்றிரவு இருளில் மூழ்கி காணப்பட்டுள்ளது.
இதேவேளை, மின்சார கேபிள்கள் அறுந்துள்ளமை மற்றும் நிலத்தடி கேபிள்கள் திருடப்பட்டுள்ளமை இதற்கான காரணங்கள் என அதிகாரிகள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, நெடுஞ்சாலையின் மின்சார கேபிள்கள் திருடப்படுவது இது முதல் முறையல்ல.
கடந்த ஜனவரி மாதம் அதிவேக நெடுஞ்சாலையின் உயர் அழுத்த மின்சார கேபிள்கள் அகற்றப்பட்டதால் 286 மில்லியன் ருபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல் 2023ல் ஜனவரி மாதம் வெடிகந்த பிரதேசத்தில் கோடரியை பயன்படுத்தி நான்கு விளக்கு கம்பங்கள் திருடப்பட்டுள்ளன.
இதனால் 2.4 மில்லியன் ருபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.