கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது
சட்டவிரோதமான துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் இன்று (15) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மினுவாங்கொடை வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே குறித்த துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வீட்டில் தோட்டாக்கள், கைத் துப்பாக்கி
இதன்போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கான தோட்டாக்கள், கைத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மூன்று வாள்கள் மற்றும் இரண்டு கத்திகளையும் மீட்டுள்ளனர்.
சம்பவத்தில் 45 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.