விமான நிலையத்தில் பரபரப்பு! பைகளை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருத்த அதிர்ச்சி
இலங்கையின் சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த வெளிநாட்டு நாணயங்களை டுபாய்க்கு கொண்டு செல்ல முற்பட்டபோதே இரண்டு பேர் விமான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வெளிநாட்டு நாணயங்கள் தொடர்பில் சுங்க பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது விமான நிலையத்தில் குறித்த இருவரும் சிக்கியுள்ளனர்.
கைதான இருவரின் பயணப் பைகளில் 46,000 யூரோக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கைதான சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதே போன்று சில தினங்களுக்கு முன்பு பெருந்தொகை வெளிநாட்டு நாணயங்கள் கடத்த முற்பட்ட வேளையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.