காத்தான்குடி படுகொலை ; த. வெ.க உறுப்பினர் சர்ச்சை பேச்சு; கொதி நிலையில் ஈழத்தமிழர்கள்!
நடிகர் விஜய் இன் அரசியல் கட்சியான தமிழக வெற்றிகழக உறுப்பினர் ஒருவர் விடுதலைப் புலிகள் தொடர்பில் பேசியிருந்தமை ஈழத்தமிழர்களை கொதி நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
1990 ஆகஸ்ட் 3 இல் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை சிங்கள் தரப்பால் அறங்கேற்றியதை மறைத்து விடுதலைப்புலிகள் மீது பழி விழுந்தது. எனினும் விடுதலைப்புலிகள் அவ்வாறான கொடூரத்தை செய்யவில்லை என்பது காத்தான்குடி இஸ்லாமிய மக்களுக்கும் தெரிந்த உண்மை.

கொதிநிலையில் ஈழத்தமிழர்கள்
இந்நிலையில் காத்தான் குடியில் உள்ள பள்ளிவாசலில் இஸ்லாமியர்களை கொன்றுகுவித்ததாக கூறியுள்ளமை ஈழத்தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
அதேவேளை தமிழக வெற்றிகழக தலவர் விஜய், விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் ஈழதமிழர்களுக்கு தாயை போன்றவர் என்றும், இன்று ஈழதமிழர்கள் தாயை இழந்து பரிதவித்து நிற்பதாகவும் பெருமைப்படுத்தி பேசியிருந்தார்.
இந்நிலையில் தற்போது தமிழக வெற்றிகழக உறுப்பினர் ஒருவர் காத்தான்குடி படுகொலையை விடுத்தலைபுலிகள் செய்ததாக அரசியல் மேடையில் கூறியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.