மீண்டும் சத்தியாக்கிரகத்தில் இணைந்த கஸ்ஸப தேரர்
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி கொழும்பு விகாரமமாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகத்தின் போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கஸ்ஸப தேரர், மீண்டும் விகாரமமாதேவி பூங்காவில் இடம்பெறும் சத்தியாக்கிரகத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி கொழும்பு விகாரமமாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் நேற்று (17) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் சுயவிருப்பின் போில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய நிலையில் மீண்டும் விகாரமமாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்படும் சத்தியாக்கிரகத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.