கராத்தே பயிற்றுவிப்பாளரால் இரு பாடசாலை மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்!
கம்பஹாவில் இரண்டு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் கராத்தே பயிற்றுவிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொம்பே பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹா – தொம்பே கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 16 மற்றும் 13 வயதுடைய இரண்டு மாணவிகளே துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சந்தேக நபர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவிகள் கல்வி கற்கும் அதே பாடசாலையில் கராத்தே பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வந்துள்ளார்.
இவ்வாறான நிலையில், சந்தேக நபர் கராத்தே பயிற்றுவிக்கும் போது இந்த இரு மாணவிகளையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் இளைஞன் ஒருவனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.