யாழில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சேவையால் தீவக மக்கள் மகிழ்ச்சி
காரைநகர் – ஊர்காவற்துறை இடையிலான கடல் பாதை போக்குவரத்து சேவை மீண்டும் சேவையை ஆரம்பித்துள்ளது.
இந் நிலையில் தமது தேவைகளி நிறைவேறும் பொருட்டு வெளிப்பிரதேசங்களுக்கு செல்லும் தீவக மக்களுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்த நடவடிக்கை
கடல் பாதையில் சுமார் 05 நிமிடத்தில் கடக்க கூடிய ஊருக்கு தரை வழிப்பாதையாக செல்வதாக இருந்தால், சுமார் 45 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும் .இதனால் பாசசாலை மாணவர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், மற்றும் தம் தேவைகளை நிறைவேற்றும்பொருட்டு வெளியேறிச்செல்வோல் பரும் இன்னல்கள எதிர்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த கடல் பாதை பழுதடைந்தமை தொடர்பாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அதை தொடர்ந்து உரிய அதிகாரிகள் ஊடாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட அமைச்சர், போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான அங்கு நேரில் சென்று திருத்தப்பணிகளை பார்வையிட்டிருந்தார்.
அத்துடன், திருத்தப்பணிகளை விரைவு படுத்துவதுடன் அதுவரை பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுப்பது தொடர்பாகவும் பணிப்புரை வழங்கியிருந்த நிலையில், தற்போது காரைநகர் – ஊர்காவற்துறை இடையிலான கடல் பாதை போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.