மாணவிகள் ,ஆசிரியைகளின் ஆபாச வீடியோக்களுடன் சிக்கிய ஆசிரியர் !
தமிழகத்தின் கன்னியா குமரியில் ஆசிரியர் ஒருவர், மாணவிகள், ஆசிரியைகளின் ஆபாச வீடியோக்களுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் நாகர்கோவில் கோட்டார் வட்டவிளையைச் சேர்ந்த திருமணமான இளம் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுளதாக கூறப்படுகின்றது.
விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
கைதான ஆசிரியர் கன்னியாகுமரி அருகே உள்ள தனியார் பாடசாலையில், உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வரும் நிலையில் அப்பாடசாலையில் கல்வி கற்கும் 12 ஆம் தர மாணவியிடம் ஆசைவார்த்தைகள் கூறி பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.
மாணவி வழங்கிய புகாரின் பேரில் கன்னியாகுமரி பொலிஸார் குறித்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகின.
குறித்த நபர் தன்னிடம் கல்வி கற்கும் மாணவிகள், சக ஆசிரியைகள் உள்ளிட்ட பல பெண்களுடன் தொடர்பினைப் பேணி வந்ததுடன் அவர்களை ஆபாச வார்த்தைகள் கூறி மயக்கி அவர்களது நிர்வாண வீடியோக்களை பெற்று வந்துள்மையும் தெரிய வந்துள்ளது.
ஆசிரிய்ர ஆபாச வீடியோக்களுடன் கைதான சம்பவம் கன்னியா குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக கூறப்படுகின்றது.