இளம் பெண் மர்மமான முறையில் கொலை: இராணுவ சிப்பாய் கைது!
கண்டி அலவத்துகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேகம பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 வயதுடைய பெண்ணின் சடலம், அவரது வீட்டிற்கு அருகிலுள்ள வயல் நிலத்தின் சதுப்பு நிலத்தில் இருந்து கிராம மக்களால் நேற்று சனிக்கிழமை (11-03-2023) மீட்கப்பட்டது.

குறித்த பெண்ணின் கணவர் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த வேளையில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட வீட்டில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சந்தேக நபரின் வீட்டிற்குள் சென்ற பொலிஸார், பொலிஸ் நாயின் உதவியுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

38 வயதுடைய சந்தேக நபர், முன்னர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருந்தமையினால், தற்போது இலகுரக கடமைகளில் இராணுவத்தில் பணிபுரிவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பான செய்திகள்
சேற்றில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் வெளிவந்த உண்மைகள்
சாமி சிலையின் கையில் ரத்தத்துடன் கிடந்த மனிதத் தலை ; பிறந்த நாளன்று நடத்தப்பட்ட கொடூரத்தின் பின்னணி வௌியானது
தமிழர் பகுதியொன்றில் சிறுமிக்கு பல தடவைகள் நடத்தப்பட்ட கொடூரம் ; துயரை ஏற்படுத்தும் குடும்பப் பின்னணி