கமல் மீது வழக்குத் தொடரப்பட்டு பிக் பாஸ் நிகழ்ச்சி இடைநிறுத்தப்படுமா!
பிரபல தென்னிந்திய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என பெண்கள் முறையிட்டதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து பிரதீப் ரெட் கார்ட் (Red card) வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டில் உள்ள மாயா பூர்ணிமா ஜோவிகா ஐஷு ஆகியோர் கூட்டாக சேர்ந்து பிரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என முத்திரை குத்தி பிரதீப்பை வெளியேற்றி விட்டனர் என விமர்சனம் எழுந்துள்ளது.
பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து கமல்ஹாசன் இவ்வாரம் வெளியேற்றப்பட்டமைக் குறித்து விளக்கமளிக்காவிட்டால் அவரது அரசியல் நிலைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
திறமையான ஜோவிகா
மேலும் பிக்பாஸ் வீட்டில் ஜோவிகா வனிதா போன்றல்லாமல் மிகவும் திறமையாக நன்முறையில் நடந்துக்கொண்டு வருகிறார் என இரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றிருந்தார்.
எனினும் தற்போது புல்லி கேங் என சொல்லப்படும் மாயாவுடன் இணைந்து நடந்துக் கொள்ளும் விதம் இரசிகர்கள் மத்தியில் பெரும் கடுப்பேற்றி உள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பிரதீப்பை வெளியேற்றுவதற்கான கடந்த வார எபிசோட்டில் பெண் போட்டியாளர்கள் உரிமைக்குரல் எழுப்பியபோது ஜோவிகா முதலில் குரல் எழுப்பியதால் ஜோவிகா பிரதீப் வெளியேற்றத்திற்கு பிரதான காரணமாகியுள்ளார் என நெட்டிசன்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆவேசமாக குரல் எழுப்பிய வனிதா
மக்களைத் தூண்டி விடுவதற்காக பொய்யான காரணம் சொல்லி பிரதீப்பை வெளியேற்றியதாக விசித்ரா பேசுகிறார். என் மகள் ஜோவிகா பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசவே இல்லை. நான் வழக்கு தொடர்வேன்.
18 வயதான ஜோவிகா எதன் அடிப்படையில் பெண்களட பாதுகாப்பு என்று கூறி ரெட்கார்டு கொடுத்தீங்கன்னு கேட்டு கேஸ் போடுவாள் . இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கவில்லையாயின் நான் அவதூறு வழக்கு தொடர்வேன்.
கமல் சார் தான் பெண்கள் பாதுகாப்பு என பேசினார் என வனிதா ஆவேசமாகப் பேசியுள்ளார்.
மேலும் பிளான் பண்ணிதான் பிரதீப்பை வெளியேற்றியுள்ளனர் என சிலர் காணொளிகளையும் பரப்பி வருகின்றனர். இதனால் என் மகளுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.
கமல் சார் மீது வழக்கு
இவ்வாரம் இதுகுறித்து கமல் சார் இவ்வாரம் பேசவில்லையாயின் கமல் சார் மீது வழக்கு தொடர்வோம். தன் மகளின் எதிரடகாலம் குறித்தும் சிந்திக்க வேண்டும் எனவும் பேசியுள்ளார்.
இந்நிலையில் கமல்ஹாசன் இது குறித்து இவ்வாரம் கண்டிப்பாக பேசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நான் சட்டம் படிக்காவிட்டாலும் சட்டம் குறித்து எனக்கு எல்லாமே தெரியும் என வனிதா தெரிவித்துள்ளார்.
அதனால் சட்டப்படி வனிதாவுக்கு விளக்கம் அளிப்பார்களா இல்லை அவதூறு வழக்கைத் தொடர்வார்களா எனத் தெரியவில்லை . இவ்வாறான நிலையை கமல்ஹாசன் பிக் பாஸ் விஜய் டீவி கூட எதிர்ப்பார்த்திருக்கமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.