கல்முனையில் 5,000க்கும் மேற்பட்ட மருந்து மாத்திரைகளுடன் சிக்கிய நபர்!
கல்முனையில் கடற்படை மற்றும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது அனுமதிப்பத்திரம் இன்றி விற்பனைக்காக வைத்திருந்த 5,033 மாத்திரைகளுடன் 63 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனையில் உள்ள பெரியநீலாவணை பொலிஸாருடன் இணைந்து தென்கிழக்கு கடற்படையினர் நேற்று முன்தினம் (04-04-2024) இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது, சந்தேகத்தின் பேரில் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டை சோதனை செய்த போது மருந்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மருதமுனை வசிப்பிடமாகக் கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட மருந்துப் பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்முனை உணவு மற்றும் மருந்துப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.