மஹிந்த ராஜபக்ஷவை படுகொலை செய்ய தேசிய மக்கள் சக்தி சதித்திட்டம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை படுகொலை செய்ய தேசிய மக்கள் சக்தி சதித்திட்டம் தீட்டுவதாக பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தமது அரசாங்கத்தின் கீழ் உள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் குடியிருப்புகளையும் பாதுகாப்பையும் பறித்து இந்த சதி முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த உண்மையை வெளிப்படுத்துமாறு அக்கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுப்பதாகவும் திஸ்ஸ குட்டியாராச்சி கூறினார்.
பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளநிலையில், வேட்பாளர்கள் தீவிர பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.