ஜே.வி.பி. காடைத்தனம் புரியும் கட்சி ;யாழில் சீறிப்பாய்ந்த பெண் உறுப்பினர்
யாழ்ப்பானம் மானிப்பாய் பிரதேச சபையின் இரண்டாவது அமர்வானது இன்றைய தினம் (25) வெள்ளிக்கிழமை தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமானது.
இதன்போது ஜே.வி.பி. காடைத்தனம் புரியும் கட்சி என மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் குற்றம் சாட்டிய போது, அக்கட்சியின் பெண் உறுப்பினர் ஒருவர் சபையில் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டமையால் , சபையில் குழப்பம் ஏற்பட்டது.
இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் லே.ரமணன் ஜே.வி.பி காடைத்தனமான கட்சி எனக் கூறினார். உடன் எழுந்த ஜே.வி.பியின் விகிதாசார உறுப்பினரான வினோத் தனு, குறித்த வார்த்தை பிரயோகித்துக்கு எதிராக கூச்சலிட்டு சண்டையிட்டார்.

17 வருடங்களாக தந்தைக்காக காத்திருக்கும் ஒரு மகளின் கண்ணீர்க் குரல்; இரக்கம் காட்டுவாரா ஜனாதிபதி அனுர?
இதன்போது சபையில் சச்சரவு ஏற்பட்டு அமைதியின்மை ஏற்பட்டது. இந்நிலையில் பலத்த முயற்சிக்கு பின்னர் தவிசாளர் சபையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக கூறப்படுகின்றது.