ஜெனிவா செல்லும் நீதி அமைச்சர் தலைமையிலான குழு
இந்த வாரம் நீதி அமைச்சர் ஹர்சன ராஜகருணா, பிரதி அமைச்சர் முனீர் மௌலவி உட்பட அந்த அமைச்சின் அதிகாரிகள் கொண்ட விசேட குழு ஜெனிவா செல்கின்றது.
ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெறு கின்றது.
இதில், பங்கேற்கவே இந்தக் குழு அங்கு செல்கின்றது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழு கடந்த திங்கட்கிழமை ஜெனிவா சென்று இலங்கையின் நிலைப்பாட்டை அறிவித்து, நாடு திரும்பியுள்ளது.
இந்தநிலையிலேயே நீதி அமைச்சர் தலைமையில் விசேட குழு ஜெனிவா செல்லவுள்ளது.
குறித்த குழு ஜெனிவாவில் உள்ளக நடவடிக்கைகளின் முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டவும் உள்ளகப் பொறிமுறை விசாரணைகளை வலுப்படுத்தும் செயல் முறைகளை வலுப்படுத்தும் முயற்சி களிலும் ஈடுபடும் என்றும் கூறப்படு கின்றது.