அமெரிக்காவில் ஷாப்பிங் மாலில் திருடிய இந்திய பெண்; திட்டித்தீர்க்கும் இணையவாசிகள்
அமெரிக்காவில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் திருடும்போது கையும் களவுமாக பிடிபட்ட இந்தியப் பெண் ஒருவர், கதறி அழும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் ஜனவரி 15 அன்று இடம்பெற்றதாக கூறப்படு நிலையில் , கடந்த சில தினங்களின் முன்னரே இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
கதறி அழும் வீடியோ
விசாரணை அறையில் கூப்பிய கைகளுடன் அமர்ந்திருக்கும் அந்தப் பெண் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்.
அடுத்த சில நிமிடங்களில் அவர் கண்ணீர் விட்டு அழுகிறார். பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தியபோது தான் ஒரு "குஜராத்தி" என்று பதிலளித்தார். "அது எங்கிருக்கிறது?" என்று ஒரு அதிகாரி கேட்க, "இந்தியா" என்று அந்தப் பெண் அழுது கொண்டே பதிலளிக்கிறார்.
பின்னர் அங்கிருந்த கடையின் ஊழியர் ஒருவர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அதிகாரிகளிடம் வழங்குகிறார். அதில் அந்தப் பெண் பணம் செலுத்தாமல் செக்அவுட்டைக் கடந்து பொருட்களை எடுத்துச் செல்வதை பார்க்க முடிகிறது.
இதற்கிடையில் போலீசாரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறவே, மருத்துவ உதவி தேவையா என்று போலீசார் மீண்டும் மீண்டும் அவரிடம் கேட்டனர்.
தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள். நான் இனி ஒருபோதும் இப்படிச் செய்ய மாட்டேன்" என்று அழுது கொண்டே போலீசாரிடம் அவர் கெஞ்சுவதும் விடியோவில் உள்ளது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், இந்தியாவின் மானத்தை வாங்கி விட்டாயே என அந்தப் பெண்ணை கடுமையாக திட்டி பதிவிட்டுள்ளனர்.