தலையணைக்கு அடியில் இந்த 1 பொருளை வைத்து தூங்கினால் போதும் பிரச்சனைகள் அனைத்தும் ஓடிவிடும்!
நமக்கு இருக்கும் தீர்க்கவே முடியாத பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடிய பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம்.
சில பேருக்கு சில பிரச்சனைகளுக்கான தீர்வு என்பது கிடைக்கவே கிடைக்காது. எவ்வளவோ கோவில் குளம் ஏறி இறங்கி இருப்பார்கள். எவ்வளவோ பரிகாரங்கள் செய்திருப்பார்கள்.
குறிப்பிட்டு ஒரு பிரச்சனையை தீர்ப்பதற்கு பலவகையான முயற்சிகளை மேற்கொண்டு இருப்பார்கள். ஆனால் பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வு மட்டும் கேள்விக்குறியாகவே நிற்கும். காலத்தால் சரிசெய்ய முடியாத பிரச்சனைகளுக்கு கூட எளிமையான ஒரு தீர்வை பெற வேண்டுமா.
தலையணக்கு அடியில் இந்த ஒரு பொருளை வைத்து தூங்கினாலே போதும். அந்த ஒரு பொருள் தெரியுமா?
இன்றைய பரிகாரத்தின் ஹீரோ இந்த பெருங்காயம் தான். கட்டி பெருங்காயத்திலிருந்து சிறிய துண்டை தான் இன்றைய பரிகாரத்திற்கு பயன்படுத்த போகின்றோம்.
இரவு தூங்க செல்வதற்கு முன்பு முகம் கை கால்களை கழுவி கொள்ளுங்கள். பூஜை அறைக்கு சென்று குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து, ஒரு சின்ன கட்டி பெருங்காயத்தை உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த பெருங்காயத்தோடு அப்படியே படுக்கையறைக்கு வாருங்கள்.
தீர்க்க முடியாத பிரச்சனை தீர வேண்டுமா
நீங்கள் எந்த இடத்தில் படிப்பீர்களோ, அந்த இடத்தில் அமர்ந்து பெருங்காயத்தை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு, உங்களுக்கு இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை, தீர்க்க முடியாத அந்த பிரச்சனை தீர வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். நம்பிக்கையோடு பிரபஞ்சத்திடம் பிரச்சனை தீர வேண்டுதல் வையுங்கள்.
பிறகு அந்த பெருங்காயத்தை ஒரு வெள்ளை துணியில் வைத்து முடிந்து தலையணுக்கு அடியில் வைத்து படுத்து தூங்குங்கள். மூன்று நாட்கள் இதே போல இதே பெருங்காயத்தை கையில் வைத்து வேண்டுதல் வைக்க வேண்டும்.
மூன்றாவது நாள் இரவு தூங்கி காலையில் எழுந்ததும், பல் மட்டும் தேய்த்து விட்டு, ஒரு சின்ன தட்டில் இந்த பெருங்காயத்தை வைத்து அதன் மேலே ஒரு கட்டி கற்பூரத்தை வைத்து பற்ற வைக்க வேண்டும். நெருப்பில் பெருங்காயம் எரிந்த சாம்பல் ஆகிவிடும். உங்களுடைய பிரச்சனைகளும் அந்த பெருங்காயத்தோடு சேர்ந்து சாம்பல் ஆவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது.
மூன்று நாட்கள் இந்த பரிகாரத்தை செய்துவிட்டு, மூன்று மாதம் இடைவெளி விடுங்கள். பிரச்சனை தீரவில்லையா. மீண்டும் இதே போல ஒரு பெருங்காயத்தை வைத்து பரிகாரம் செய்து பார்க்கலாம்.
ஏனென்றால் பிரச்சனை ரொம்ப பெரியது. அதை சரி செய்வதற்கு நேரமும் காலமும் கைகூடி வர வேண்டும். அதற்கு கொஞ்சம் இடைவெளி எடுக்க தான் செய்யும். ஆகவே அவசரப்படாமல் இந்த பரிகாரத்தை மூன்று மாதத்திற்கு ஒரு முறை செய்து வாருவது மிகவும் நல்லது.