இலங்கையில் ஒரே விடுதியில் வசமாக பிடிபட்ட 54 வெளிநாட்டு பிரஜைகள்
கணினி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், ஹிக்கடுவவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் நேற்று (11) சிறப்பு அதிரடிப்படையால் 54 வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
35 இந்திய நாட்டினரும் 19 நேபாள நாட்டினரும் கைது செய்யப்பட்டனர்.

சிறப்பு நடவடிக்கை
கணினி குற்றங்களைச் செய்வதற்காக, வெளிநாட்டினர் குழு ஒன்று ஹிக்கடுவவின் டொடண்டுவ பகுதியில் தங்கியிருப்பதாக பூசா இராணுவ முகாமில் உள்ள புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, சிறப்பு அதிரடிப் படையின் தென் மாகாண சிறப்புச் சோதனைப் பிரிவும், ஹிக்கடுவ பொலிஸாரும் இணைந்து நேற்று பிற்பகல் ஒரு சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கின.
கணினி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், ஹிக்கடுவ பொலிஸ் பிரிவின் டொடண்டுவவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் 54 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
அன்று அறிஞர் அண்ணா இன்று இவர்... வைகோவின் வீட்டில் விஜய்யின் காலில் விழுந்த பெண் ; பூரிப்பில் செய்த செயல்
அவர்களிடமிருந்து சுமார் இருநூறு கைபேசிகள் மற்றும் 25 மடிக்கணினிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் குறித்த மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிசார் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருகின்றன.