ஒரே நாளில் நடக்கும் குருபகவானின் ராசி மற்றும் நட்சத்திர பெயர்ச்சி ; திறக்கும் அதிர்ஷ்ட கதவு
தற்போது குரு பகவான் அதிசார நிலையில் இருப்பதால், அடிக்கடி ராசியை மாற்றுகிறார். இந்த அதிசார நிலை காரணமாக குரு பகவான் ஆண்டுக்கு இரண்டு முதல் மூன்று முறை ராசியை மாற்றுவார். இப்படி குரு பகவான் குறுகிய காலத்தில் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
அந்த வகையில் குரு பகவான் அக்டோபர் 31 ஆம் திகதி அதிசாரமாக ராசியை மாற்றுகிறார். அதே வேளையில் நட்சத்திரத்தையும் மாற்றவுள்ளார். இப்போது ஒரே நாளில் நடக்கும் குருபகவானின் ராசி மற்றும் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்யார் என்பதைக் காண்போம்.

அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்
கும்பம்: கும்ப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குருவின் அருளால் நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கணிசமான லாபத்தைக் காண்பார்கள். சட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரக்கூடும்.
சிம்மம்: சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும். குருவின் அருளால் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொழிலில் பெரிய வெற்றியைக் காண்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபத்தைக் காண்பீர்கள். வேலை தொடர்பான முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் சந்தித்து வந்த தடைகள் நீங்கும். வேலையில் நல்ல உயர்வைக் காண்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். அவர்கள் மூலம் நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.
மேஷம்: மேஷ ராசியின் 5 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலையில் எதிர்பாராத வளர்ச்சியைக் காண்பீர்கள். வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட காலமாக சந்தித்து வந்த பிரச்சனைகள் தீரும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.