விவகாரத்து கோரி சென்ற பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்ட நீதிவானுக்கு நேர்ந்த கதி!
பெண்ணொருவரிடம் 4,500 ரூபா இலஞ்சம் கோரிய, காதி நீதிவான் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விவாகரத்து மற்றும் விவாகரத்து ஆணையை வழங்குவதற்காக குறித்த பெண்ணிடம் இலஞ்சம் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த காதி நீதிவான் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜாஎல்ல கும்பக்கடுர பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரிடம் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி காதி நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் காதி நீதிமன்றத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நீதிவான் கைது செய்யப்பட்டதாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.