இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித்தகவல் ; சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு! எந்தெந்த பிரிவுகளில் தெரியுமா!
சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகம் (MOM), அந்நாட்டின் ‘பாரம்பரியமற்ற மூல’ (Non-Traditional Source – NTS) பணிப் பட்டியலில் மேலும் எட்டு புதிய வேலைப்பிரிவுகளைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம், முதலாளிகள் பல்வேறு பணிகளுக்காக வெளிநாட்டு ஊழியர்களை ‘பணி அனுமதிச் சீட்டு’ (Work Permit) அடிப்படையில் இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டுத் தொழிலாளர்களை முதலாளிகள் பணியமர்த்திக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கம்மிட்டி ஆஃப் சப்ளை’ (COS) 2026-ன் கீழ், வெளிநாட்டு பணியாளர் கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான மாற்றங்களின் ஒரு பகுதியாக இந்த விரிவாக்கம் அறிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் (MOM) தகவல்படி, இந்த புதிய பணிப்பிரிவுகள் உணவுச் சேவை, சமூக சேவை மற்றும் வான்வழிப் போக்குவரத்து ஆகிய துறைகளை உள்ளடக்கியுள்ளன.
இத்துறைகளில் உள்ள பணியிடங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய, உள்ளூர் பணியாளர்களைக் கண்டறிவதில் முதலாளிகள் சவால்களை எதிர்நோக்கி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விரிவுபடுத்தப்பட்ட இந்தப் பட்டியலின் கீழ் பணியாளர்களைச் சேர்க்கும் முதலாளிகள், குறைந்தபட்சம் S$2,000 (சுமார் 1,565.40 அமெரிக்க டொலர்கள்) என்ற நிலையான மாதாந்திர ஊதியத்தை வழங்க வேண்டும்.
இந்த விரிவாக்கத்தின் மூலம், குறிப்பிட்ட தொழில்துறைகளில் உள்ள முதலாளிகள், சிங்கப்பூரால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலிருந்து வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்திக்கொள்ள முடியும்.
இந்த அனுமதிக்கு அமைவாக உணவுச் சேவைகள், சமூகச் சேவைகள் மற்றும் விமானப் போக்குவரத்து ஆகிய துறைகளில் உள்ள மேலும் எட்டு வகையான பணிகளுக்கு, இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டுத் தொழிலாளர்களை முதலாளிகள் பணியமர்த்திக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.