லண்டனில் வேலை... யாழ்ப்பாண இளைஞனிடம் பாரிய பண மோசடி... சிக்கிய பிரஜை!
லண்டனில் வேலை வாங்கி தருவதாக கூறி யாழ் இளைஞனிடம் பல இலட்சம் மோசடி செய்த லண்டன் பிரஜாவுரிமை பெற்ற யாழைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர் சமீபத்தில் யாழ்ப்பாணம் வந்திருந்தவேளை, லண்டனில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை பெற்றுத் தருவதாக கூறி இளைஞனிடம் 80 இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்றுள்ளார்.
பணத்தை பெற்றுக்கொண்ட சந்தேக நபர், யாழ்ப்பாண இளைஞனை லண்டனுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்காததால், சந்தேகம் கொண்ட இளைஞன் தனது பணத்தை மீள தருமாறு கோரியுள்ளார்.
இருப்பினும், அந்த லண்டன் பிரஜை பணத்தை திருப்பித் தராததால் இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸாரினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இவ்வாறான பண மோசடி சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருவதாகவும், இது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும் பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.