தொடர் விலை வீழ்ச்சியால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
இலங்கை தங்க சந்தையில் கடந்த திங்கட்கிழமை முதல் தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான வீழ்ச்சி பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (08) ஒரு பவுண் தங்கத்தின் விலை 3,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் (All Ceylon Jewellery Merchants' Association) அறிவித்துள்ளது.

இன்று தங்க விலை
அந்தவகையில், இன்று தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 359,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 329,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,188 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.