மீண்டும் எகிறும் தங்கம் விலையால் நகைப்பிரியர்கள் க்ஷாக்!
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்தியாவில் மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.
இன்று மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
அந்த வகையில் கடந்த வாரம் தங்கம் விலை 70,000 ரூபாவிற்கும் கீழ் குறைந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் நேற்று (21) தங்கம் விலை கிராமுக்கு 220 ரூபாவிற்கும் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 8,930 ரூபாவிற்கும், சவரனுக்கு 1,760 ரூபாவிற்கும் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 71,440 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று (22) தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று கிராமுக்கு 45 ரூபாவிற்கும் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 8,975 ரூபாவிற்கும், சவரனுக்கு 360 ரூபாவிற்கும் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 71,800 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 18 காரட் தங்கம் கிராமுக்கு 35 ரூபாவிற்கும் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 7,395 ரூபாவிற்கும், சவரனுக்கு 280 ரூபாவிற்கும் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 59,160 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
மேலும் வெள்ளியும் கிராமுக்கு 1 ரூபாவிற்கும் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 112 ரூபாவிற்கும், ஒரு கிலோ வெள்ளி 1,12,000 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.