தொடர்ந்து குறைந்துவரும் தங்கம் விலையால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தற்போது தொடர்ந்து சரிந்து வருவது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்தவகையில் ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்தே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வருகிறது .
இன்றைய தங்கம் விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் நேற்று (09.06.25) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8,955-க்கும், ஒரு சவரன் ரூ.71,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று (09.06.2025) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,945-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,350-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.58,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
மே;லும் வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.119-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,19,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.