அரசாங்கத்தின் அழைப்பை அடியோடு நிராகரித்த ஜீவன் தொண்டமான்!
இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு பதவியை ஏற்குமாறு அரச தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட அழைப்பை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) நிராகரித்துள்ளாரென தெரியவருகின்றது.
இதற்கு முன்னர் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa) பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், எதிர்வரும் 18 ஆம் திகதி புதிய அமைச்சரவையை நியமிப்பதற்கு எதிர்பார்த்துள்ள அரசு, அதற்கான பெயர் பட்டியலை தற்போது தயாரித்து வருகின்றது.
இந்த நிலையில் புதிய அமைச்சரவையில் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு பதவியை ஏற்குமாறு ஜீவன் தொண்டமானுக்கு அரச தரப்பில் இருந்து தூதனுப்பட்டுள்ளது.
அந்த அழைப்பை அவர் நிராகரித்துள்ளார்.
” மக்கள் பக்கம் நின்றே சுயாதீனமாக செயற்படும் முடிவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எடுத்தது. அந்த முடிவில் மாற்றம் இல்லை.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்தும் சுயாதீனமாகவே செயற்படுவோம்.” என்று ஜீவன் தொண்டமான் திட்டவட்டமாக அறிவித்துள்ளாரென அறியமுடிகின்றது.